Palaniammal

Name
Ms Palaniammal D/O Periasamy
திருவாட்டி பழனியம்மாள் பெரியசாமி

School / Organisation
PCF Sparkletots Preschool @ Canberra Blk 468D

Ms Palaniammal is an experienced pre-school Tamil Language teacher who encourages children to discover the world for themselves. Ms Palaniammal builds on her children’s prior learning experiences to connect with and understand new concepts by using interesting teaching materials. She also uses open-ended questions to motivate her children to learn and explore independently.

One of her greatest strengths lies in her ability to seamlessly integrate her children’s learning of the Tamil Language, culture and practices with Maths and Science. Ms Palaniammal also provides opportunities for children to initiate conversations about other cultures and its related practices. She ensures every child has an equal opportunity to share his or her learning during discussions. She also supports children who face challenges in talking by prompting and guiding them through leading questions. Ms Palaniammal’s lessons are authentic, fun and memorable. Her approachable and pleasant disposition enables her to easily connect with her children.

As a competent and passionate Tamil Language pre-school educator, Ms Palaniammal’s professionalism makes her an excellent role model for other pre-school Tamil Language teachers.

அனுபவமிக்க பாலர்பள்ளித் தமிழாசிரியரான பழனியம்மாள் அவர்கள் பிள்ளைகள் சுயக்கற்றலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார். மேலும் பிள்ளைகள் ஏற்கனவே பெற்றிருக்கும் அறிவாற்றல், அனுபவங்கள் ஆகியவற்றைப் புதிய கற்றலோடு தொடர்புபடுத்தி அவர்களின் புரிதலை வலுப்படுத்துவதில் திறன் பெற்றவராவார்.

தமிழ்ப் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களைக் கணிதம் மற்றும் அறிவியலோடு எளிதாக ஒருங்கிணைத்துத் தமிழில் பாடம் நடத்துவதில் இவர் கைதேர்ந்தவர். இந்த இயல்பான ஒருங்கிணைப்பினால், பிள்ளைகளின் திறன்களையும் கற்றலையும் மேம்படுத்துவதோடு பிறரின் பண்பாடுகளைப் பற்றி உரையாடுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறார். மேலும் பிள்ளைகள் எளிதில் அணுகக்கூடிய குணம் படைத்த இவர், எல்லாப் பிள்ளைகளும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்பளிப்பதில் அக்கறை கொண்டவர். பையப்பயிலும் மாணவர்களுக்குப் பொருத்தமான தூண்டுதல் மற்றும் துருவதல் வினாக்களைக் கேட்டு வழிகாட்டும் தன்மை உடையவர்.

பழனியம்மாள் அவர்கள் தமது பணியில் முழு ஈடுபாடு கொண்ட ஒரு திறமையான பாலர்பள்ளி ஆசிரியர். இவரது கற்றல் கற்பித்தல் முறைகள், மகிழ்வூட்டுவதாகவும் அதே சமயம் இயல்பாகவும் இருப்பதால், அவரது பாடங்கள் மாணவர்களைக் கவரும்வண்ணம் அமைகின்றன.

பழனியம்மாள் அவர்கள் மற்ற பாலர்பள்ளித் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu