Narayanasamy

Name
Mdm Narayanasamy Karkuzhali
திருவாட்டி நாராயணசாமி கார்குழலி

School / Organisation
PCF Sparkletots Preschool @ Tampines West Blk 140

Mdm Karkuzhali is a confident and passionate Tamil Language teacher who conducts fun and enriching lessons by planning and facilitating holistic learning experiences in a safe environment. This enables her children to pursue their learning in an interactive and enjoyable manner and without fear of making mistakes so that they develop into confident users of the language.

Mdm Karkuzhali uses both a wide range of materials during her lessons (both teacher-made and authentic materials) and thought-provoking questions to capture her children’s interest and to continually reinforce their learning throughout the whole lesson.

Mdm Karkuzhali is a confident and eloquent individual who believes in life-long learning and is constantly seeking opportunities to enhance her skills as a teaching professional. Her positive attributes make her an excellent model for other pre-school Tamil Language teachers.

திருவாட்டி கார்குழலி அவர்கள் தன்னம்பிக்கை நிறைந்த உணர்வுமிக்க தமிழாசிரியர் ஆவார். இவரது பாடங்கள் மாணவர்களின் முழுமையான கற்றலுக்கு வழிவகுக்கும் வகையிலும் மிகுந்த ஆர்வமூட்டுவதாகவும் அமைந்துள்ளன. இவரது கற்றல் அணுகுமுறைகளால் மாணவர்கள், ஆர்வத்தோடு மொழியைக் கற்பதோடு தன்னம்பிக்கையுடன் மொழியைப் பயன்படுத்துகின்றனர்.

திருவாட்டி கார்குழலி அன்றாடம் பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஏதார்த்தமான பொருள்களையும் சுயமாக உருவாக்கிய பல்வேறு பாடக்கருவிகளையும் தன்னுடைய கற்றல் கற்பித்தலில் பயன்படுத்துகிறார். மேலும் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் பல கேள்விகளை எழுப்பி அவர்களது கற்றலைப் பாடவேளை முழுவதும் மீள்வலியுறுத்துகிறார்.

திருவாட்டி கார்குழலி தன் கருத்துகளைச் செறிவாகவும் தன்னம்பிக்கையுடனும் வெளிப்படுத்தும் ஆற்றலுடையவர். தனது திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடிச்செல்லும் இவர், வாழ்நாள் கற்றலில் மிகுந்த நம்பிக்கை உள்ளவராகவும் விளங்குகிறார். இதுபோன்ற சிறப்பான பல நற்குணங்களைத் தன்னகத்தே கொண்ட திருவாட்டி கார்குழலி அவர்கள் மற்ற பாலர்பள்ளித் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu