TL2 Tamil and Your Child

தமிழும் உங்கள் பிள்ளையும்

Mr Jeyarajadas Pandian

Speaker
Dr S P Jeyarajadas Pandian
முனைவர் எஸ் பி ஜெயராஜதாஸ் பாண்டியன்

School / Organisation
Academy of Singapore Teachers

TIME
2.15 p.m. – 3.15 p.m.

VENUE
Room 300

Register Sharing Session

SPEAKER’S PROFILE

Dr Jeyarajadas Pandian has been a Tamil Language (TL) teacher for 39 years. He holds a degree of Master of Education in Curriculum, Teaching and Learning. He is currently a Principal Master Teacher at the Academy of Singapore Teachers. Dr Pandian works closely with schools, parents and the community to promote the teaching and learning of Tamil. He uses a variety of approaches and strategies to develop an appreciation of the Tamil language and culture amongst students and does so in many innovative ways. Dr Pandian was honoured with the Best Ideator Award for his contributions to TL teaching and learning in 2009. He has also been conferred with the National Day Commendation Award in 2012.

படைப்பாளரைப் பற்றி

முனைவர் எஸ் பி ஜெயராஜதாஸ் பாண்டியன் அவர்கள் 39 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது கல்வி அமைச்சின் ஆசிரியர் கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கான தலைமை முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்காகப் பள்ளிகள், பெற்றோர், சமூகம் ஆகிய முத்தரப்புக் கூட்டணியோடு ஆற்றிவரும் இவரது பணி பாராட்டுக்குரியது. இவர் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் பல புத்தாக்க வழிகளில் கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளைப் படைப்பாக்கத்துடன் பயன்படுத்தித் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் மாணவர்களிடத்தில் எடுத்துரைப்பதில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். 2004-ஆம் ஆண்டு, இவர் கல்வி அமைச்சின் உன்னதச் சேவை விருது பெற்றதுடன் 2009-ஆம் ஆண்டின் சிறந்த கருத்துருவாக்கத்திற்கான விருதையும் பெற்றார். ஆசிரியர், மாணவர் மேம்பாட்டுக்குப் பல வழிகளில் உதவிவரும் இவருக்கு 2012-ஆம் ஆண்டு தேசிய தின விருதாகப் பாராட்டுப் பதக்கம் வழங்கப்பட்டது

SHARING SYNOPSIS

Dr Jeyarajadas Pandian will share strategies with parents, caregivers and educators to spark interest in speaking Tamil at home. He will also share on ways to engage young children to encourage them to construct proper sentences in Tamil when speaking and inculcating values through conversations in Tamil.

சுருக்கம்

தமிழ்மொழியில் எளிமையாகப் பேசி உரையாடுவதற்கு ஏற்ற வீட்டுச் சூழலை எவ்வாறு அமைப்பது? பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இளம்வயதிலேயே வீட்டில் தமிழ்மொழியில் பேசுவதற்கு அவர்களை எவ்வாறு ஆர்வமூட்டுவது? தமிழை இல்லமொழியாக்குவதினால் நன்மைகள் யாவை? முதலிய வினாக்களுக்கு விடை காணும் வகையில் சில வழிமுறைகளை முனைவர் ஜெயராஜதாஸ் அவர்கள் இந்தப் பயிலரங்கில் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். தமிழ்மொழியின் இனிமையை அவர்களுக்கு எவ்வாறு விளையாட்டுகளின்மூலம் எடுத்துரைக்கலாம் போன்ற குறிப்புகள் இப்பயிலரங்கில் பகிர்ந்துகொள்ளப்படும். மேலும், கதை, பாடல், நாடகம் முதலியவற்றை மொழி கற்றலுக்குப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

பிள்ளைகள் தமிழ்மொழியை ஆர்வத்துடன் வீட்டிலேயே பேசத் தொடங்குவதற்குப் பெற்றோர்கள், என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டு தங்கள் பங்கை ஆற்றலாம் என்பன பற்றியும் இப்பயிலரங்கில் கலந்துகொள்வோர் அறிந்துகொள்ள இயலும்.
இளம்வயதிலேயே பிள்ளைகளுக்குத் தமிழ் பேசும் பழக்கத்தையும் வாய்ப்புகளையும் இல்லத்தில் அளிப்பதன்வழி அவர்களின் உள்ளத்தில் தமிழார்வத்தை விதைக்க முடியும் என்பது முனைவர் ஜெயராஜதாஸ் அவர்களின் நம்பிக்கை ஆகும்

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu