TL3 A Peek into a Tamil Language Classroom (Pre-school to Primary)

தமிழ்மொழி வகுப்பறை – ஒரு பார்வை (பாலர் பள்ளி முதல் தொடக்கப்பள்ளி வரை)

Mrs Nantheini Elangovan
Mrs Puspalatha Saravanan

Speaker
Mrs Nantheini Elangovan திருமதி நந்தினி இளங்கோவன்
Mrs Puspalatha Saravanan திருமதி புஷ்பலதா சரவணன்

School / Organisation
Geylang Methodist Primary School;
Princess Elizabeth Primary School

TIME
3.30 p.m. – 4.30 p.m.

VENUE
Room 300

Register Sharing Session

SPEAKERS’ PROFILE

Mrs Nantheini Elangovan has been in the teaching field for the past 17 years. She is currently a Tamil Language teacher at Geylang Methodist Primary School. During her 5-year stint as a Curriculum Resource Development Officer at the Curriculum Planning and Development Division, she was one of the lead officers in developing the pre-school curriculum for Tamil Language. She also has vast experience in the planning and developing of the primary curriculum for Tamil Language.

Mrs Puspalatha Saravanan has been in the teaching field for 30 years. She is currently Year Head (Lower Primary) at Princess Elizabeth Primary School. During her 6-year stint as a Senior Curriculum Planning Officer at the Curriculum Planning and Development Division, she oversaw the development of the pre-school curriculum for Tamil Language. She also has experience in the planning and developing of the secondary curriculum for Tamil Language.

படைப்பாளரைப் பற்றி

திருமதி நந்தினி இளங்கோவன் அவர்கள் கடந்த 17 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் சேவையாற்றி வருகிறார். தற்போது இவர் கேலாங் மெத்தடிஸ்ட் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் ஐந்து ஆண்டுக் காலம் பாடத்திட்ட வளமேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய போது பாலர் பள்ளிப் பாடக்கலைத்திட்ட உருவாக்கப்பணிக்குழுவுக்குத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். மேலும், தொடக்கநிலைப் பாடக்கலைத்திட்ட உருவாக்கப்பணியிலும் இவர் அனுபவம் பெற்றவர்.

திருமதி புஷ்பலதா சரவணன் அவர்கள் 30 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் சேவையாற்றி வருகிறார். தற்போது இவர் பிரின்ஸஸ் எலிஸபெத் தொடக்கப்பள்ளியில் கீழ்த்தொடக்கநிலைக்கு ஆண்டுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் ஆறு ஆண்டுக் காலம் மூத்த பாடத்திட்ட வரைவு அதிகாரியாகப் பணியாற்றிய போது பாலர் பள்ளிப்பாடக்கலைத்திட்ட உருவாக்கப்பணிக்குழுவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். மேலும், உயர்நிலைப் பாடக்கலைத்திட்ட உருவாக்கப்பணியிலும் இவர் அனுபவம் பெற்றவர்.

SHARING SYNOPSIS

The early years of childhood are very significant in a child’s holistic development. A quality pre-school education enables children to gain confidence, social skills and values. These attributes will lay a strong foundation for their future. Hence, as part of on-going efforts to promote bilingualism and quality pre-school education, the Ministry of Education developed a Mother Tongue Languages (MTL) framework in 2013. Following that, the pre-school curriculum was developed for English and MTL. The Starlight Literacy Package “Vinmeengal” was planned and developed for children to have joyful learning of Tamil. These materials are specially developed with a distinct Singapore flavour. Come over to this sharing session to find out more about these materials and they can adequately prepare the children for a smooth transition to primary school.

சுருக்கம்

ஆரம்பக் காலப்பருவம் ஒரு பிள்ளையின் முழுமையான வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. தரமான பாலர் கல்வி என்பது பிள்ளைகளின் தன்னம்பிக்கை, சமூகத் திறன்கள், பண்புகள் ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது. இவை பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தருகின்றன. கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளுக்கான பாடக்கலைத்திட்டம் 2013-ஆம் ஆண்டு உருவாக்கம் கண்டது. இப்பாடக்கலைத்திட்டம் தரமான பாலர் கல்வியை வழங்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன் ஆங்கில மொழியோடு தாய்மொழியையும் (மலாய்/சீனம்/தமிழ்) வழங்குகிறது. பாலர்பள்ளியில் பயிலும் பிள்ளைகள் தாய்மொழியை ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கற்க உதவுவதற்காக ‘விண்மீன்கள்’ என்னும் தமிழ்ப் பயிற்றுகருவிகளின் தொகுப்பு உருவாக்கப்பட்டது. இந்தப் பயிற்றுவளங்கள் சிங்கப்பூர்ச் சூழலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இந்தத் தொகுப்பைப்பற்றி அறிந்துகொள்வதோடு, கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகள் எவ்வாறு தொடக்கநிலைக்குத் தயாராகிறார்கள் என்பதையும் இந்தப் பகிர்வில் அறிந்துகொள்ளலாம்.

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu