TL5 Learning Tamil the Fun Way

தமிழை மகிழ்வுடன் கற்றல்

Mdm Seethalaksmy
Mdm Tauled Tunisha binte Mohammad Paser

Speaker
Mdm Seethalaksmy
திருமதி சீதாலட்சுமி

Mdm Tauled Tunisha binte Mohammad Paser
திருமதி ஷதௌலட்துநிஷா த/ஷப முகம்மது பஷிர்

School / Organisation
Mother Tongue Languages Branch, Ministry of Education;
CHIJ Kellock Primary School

TIME
3.30 p.m. – 4.30 p.m.

VENUE
Room 302

Register Sharing Session

SPEAKERS’ PROFILE

Mdm Seethalaksmy is a Senior Curriculum Resource Development Officer at the Tamil Language Unit, Ministry of Education, Singapore. She was one of the lead officers in developing the 2015 Primary Tamil Language Curriculum and its related teaching resources. She had the opportunities to present at the 11th World Tamil Teacher’s Conference on Singapore’s Tamil Language Curriculum and conduct workshops at various platforms pertaining to the work she had been involved in with regard to Tamil Language. Prior to her joining MOE, she was Head of Department at Xingnan Primary School. Mdm Seethalaksmy has 29 years of experience teaching Tamil in both secondary and primary schools.

Mdm Tauled Tunisha has been teaching Tamil Language (TL) for the past 16 years. Over the past five years, she has been helming the Malay Language and Tamil Language departments as Subject Head. As an experienced teacher, Tunisha is passionate about teaching TL and infusing the love of the language in her students. In order to achieve this, she ensures that teaching and learning is not just focused on exam results but rather in exploring various ways to motivate her students to learn the Tamil language with joy. In line with the deliverables of infusing ICT in teaching and learning, Tunisha designs engaging learning experiences for her students by using various educational apps found on the internet. In taking such effort, she believes that through her students’ learning, the Tamil language will continue to be a living language in years to come.

படைப்பாளரைப் பற்றி

திருவாட்டி சீதாலட்சுமி அவர்கள் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்மொழிப் பகுதியில் மூத்த பாடத்திட்ட வளமேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் தொடக்கப்பள்ளிகளுக்கான 2015 பாடத்திட்டத்தையும் அதன்தொடர்பான பயிற்றுவளங்களையும் வடிவமைக்கும் முன்னணி அதிகாரிகளுள் ஒருவராக இருக்கிறார். 11-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டிலும் பிற தளங்களிலும் தமிழ்மொழிக் கல்வி தொடர்பாகவும் பயிற்றுவளங்கள் தொடர்பாகவும் பகிர்ந்துகொண்டுள்ளார். இதற்குமுன் சிங்னான் தொடக்கப்பள்ளியில் நற்குணமும் குடியியல் கல்விக்குமான துறைத்தலைவராகப் (HOD/CCE) பணியாற்றியுள்ளார். இவர் தொடக்கப்பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளியிலும் 29 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த அனுபவமுமிக்கவர்.

தௌலட் துநிஷா கடந்த 16 ஆண்டுகளாக தமிழாசிரியராகப் பணி புரிகிறார். மேலும், கடந்த 5 வருடங்களாக இவர் தமது பள்ளியின் மலாய் மற்றும் தமிழ்மொழிகளுக்கான பாடத்தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். தௌலட் துநிஷாவுக்குத் தமிழ் மொழியைக் கற்பிப்பதில் அதிக ஆர்வமுண்டு. அதே போல் ஒவ்வொரு மாணவரும் தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்றிட வேண்டும் என்றும் இவர் ஆவல் கொண்டுள்ளார். இதனால், இவர் தம் கற்றல் கற்பித்தலைத் தேர்வின் அடிப்படையில் மட்டும் நிகழ்த்தாமல் தமிழ்மொழியின்பால் மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் வகையில் பல நடவடிக்கைகள், உத்திகள் ஆகியவற்றையும் இணைத்து நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட முயற்சிகளால் தமிழ்மொழியை மகிழ்வூட்டும் வண்ணம் தம் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று தௌலட் துநிஷா கருதுகிறார். மேலும், இவர் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டின்வாயிலாக மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டும்வகையில் கற்றல் அனுபவங்களை வடிவமைத்தும் வருகிறார். இணையத்தைப் பயன்படுத்திக் கற்றலுக்குகந்த செயலிகளைப் பயன்படுத்துவதன்மூலமும் இவர் மாணவர்களின் ஆர்வமூட்டும் கற்றலுக்கு மெருகூட்டுகிறார். இந்த முயற்சிகளின் வாயிலாக தமது மாணவர்களிடையே தமிழ்மொழியை ஒரு வாழும் மொழியாக விளங்கச்செய்திடலாம் என்று தௌலட் துநிஷா நம்புகிறார்.

SHARING SYNOPSIS

The 2015 Primary Tamil Language Curriculum was implemented at Primary One in 2015 and was rolled out to the Primary Four level this year. The curriculum aims to enable our young to communicate in Tamil, better appreciate their Tamil culture and connect with other Tamil communities in Asia and beyond.

In this sharing session, our curriculum planner will provide an insight into how young children are learning Tamil in class using the 2015 Curriculum. Parents will be able to gain an understanding of the new curriculum and how it facilitates their children’s Tamil language learning. They will get an insight into the new Tamil language instructional materials that have been designed to help their children’s literacy development. They will also be able to gather ideas on how they can effectively support their children and bring about joy in language learning.

சுருக்கம்

தொடக்கநிலைக்கான தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டம் 2015-ஆம் ஆண்டு அமலாக்கம் கண்டது. இந்த வருடம் தொடக்கநிலை நான்கிற்கான பயிற்றுகருவிகள் அமலாக்கம் கண்டுள்ளன. இந்தப் பாடக்கலைத்திட்டம் அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் இயல்பாகத் தமிழில் கருத்துப்பரிமாறிக்கொள்பவர்களாக மாணவர்களை உருவாக்குவதையும் மாணவர்கள் அவரவரது பண்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்வதோடு ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் தொடர்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதையும் நோக்கங்களாக கொண்டுள்ளது.

இந்தப் பகிர்வரங்கில் பாடத்திட்ட வரைவு அதிகாரி 2015 பாடக்கலைத்திட்டத்தின்வழி மாணவர்கள் எவ்வாறு தமிழ்மொழியைக் கற்கிறார்கள் என்பது குறித்து விளக்கமளிப்பார். புதிய பாடக்கலைத்திட்டம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, அது பிள்ளைகளின் தமிழ்மொழி கற்றலுக்கு எவ்வாறு துணைபுரிகிறது என்பதுபற்றிப் பெற்றோர்கள் அறிந்துகொள்வார்கள். புதிய பயிற்றுவளங்கள் எவ்வாறு பிள்ளைகளின் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதைப்பற்றியும் அறிந்துகொள்வார்கள். மேலும், மகிழ்வூட்டும் வகையில் மொழியைக் கற்க உதவப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்வார்கள்.

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu